Header Ads



கடவுச்சீட்டு பெற விரும்புபவர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு


அத்தியாவசியமாக தேவை என்றால் மாத்திரம் கடவுச்சீட்டு பெற வருமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரித்துள்ளார்.


அத்தோடு, கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சமீபகாலமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புதிய முறையின் கீழ் அனைத்து அத்தியாவசியமாக தேவையான நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


இதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பெறப்படும் எனவும் அவர் கூறுகிறார்.


இந்த நிலையில், பத்தரமுல்லையில் (Battaramulla) அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.