முஸ்லிம் பிரதிநிதியை தெரிவு செய்வதில், நாம் இனவாதம் பேசுவதாக நினைக்க கூடாது - சத்தார்
குருநாகல்,சாரகமவில்அமைந்துள்ள கிறீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களினுடனான விசேட சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார் அவர் மேலும் பேசுகையில்,
1994ம் ஆண்டு நடை பெற்ற போதுத்தேர்தலின் போது மர்ஹூம் அலவி அவர்கள் பாராளுமன்றம் சென்றதன் பின்பு பல வருடங்களாக ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினறை பெற முடியாமல் போனது குருநாகல் முஸ்லிம் களின் துரதிஷ்டம் என்பதை விட ஒற்றுமை இல்லாத தன்மையும் சமூகம் ஒழுங்கான முறையில் வழி நடத்தப்பாடாதது முக்கிய காரணமாகும் சுமார் இன்று ஒரு இலட்சத்தித்து இருபதாயிராத்திட்கு கூடுதலான முஸ்லிம் வாக்குகளை வைத்துக்கொண்டு பல வருடங்களாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினறை நாங்கள் பெற முடியாதது சம்பந்தமாக வெட்கப்பட வேண்டும்.
பல வருடங்களாக குருநாகல் மாவட்டத்தின் முஸ்லிகளின் அரசியல் பிரச்சனைகளை அடையாளம் கண்ட ஒரு அரசியல்வாதியாக நான் இருந்தாலும் அரசியல் அதிகாரம் என்ற சக்தி இல்லாதபோது நாம் மிகவும் சங்கடப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தாலும் தமது வாக்குகளை ஒவ்வொரு முறையும் பெற்றுக்கொடுக்கும் போது முஸ்லிம் வாக்காளர்கள் இது பற்றி சிந்திப்பதில்லை என்றாலும் என்னிடம் ஒருவர் ஒரு பிரச்சனைக்கு வரும் போது நான் ஒரு நாளும் அரசியல் பார்ப்பதில்லை.
என்றாலும் சம்பிரதாய அரசியல் செய்யும் எமது முஸ்லிம் வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தாம் சார்ந்த கட்சிக்கு மாத்திரமே வாக்காளிக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடி வாதமாக இருப்பது கவலைக்குறிய விடயமாகும் அது மட்டுமல்லாமல் ஒரே தேர்தலில் ஒரே சின்னத்தில் இரண்டு கட்சிகளில் இருவர் போட்டியிடும் போது தமது சுய நலத்தை மற்றுமே கருத்தாக கொண்டுள்ள அவைகளை மிகவும் சாதுர்யாமாக பயன்படுத்தும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் தமது பிரதிநிதியை மற்றும் தமக்கு பேரம் பேசுவதற்கு பிரயோஜனப்படுத்தும் நோக்கத்தில் விருப்பு வாக்குகளின் போது அடுத்த முஸ்லிம் கட்சியின் பிரதிநிதி வெற்றி பெறக்கூடாது என்பதில் மிகவும் உன்னிப்பாக இருந்து செயல் படுவது மிகவும் வருந்தக்கூடிய விடயம்.
2015 தேர்தலில் டாக்டர் ஷாபி அவர்களும் 2019 தேர்தலில் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் தெரிவு செய்யப்பட்ட கடைசி உறுப்பினருக்கு பின்னால் இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
இருந்தாலும் எங்களின் சுமார் ஐம்பதாயிரம் முஸ்லிம் வாக்குகளை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு கொடுத்து பெரும்பான்மையினரை மற்றும் பாராளுமன்றம் அனுப்பும் ஒரு துரதிஷ்ட நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
பெரும்பான்மை ஒருவர் பாராளுமன்றம் செல்வது பிழையில்லை இருந்தாலும் தனிப்பட்ட கலாச்சார பிரச்னைகளோடு வாழும் ஒரு சமூகம் நாங்கள் ஆதலால் எங்கள் பிரச்னைகளை பேச எங்களுக்கு என்று ஒரு உறுப்பினர் தேவை என்பதை எமது சமூகம் உணர வேண்டும். அந்த அடிப்படையில்தான் இவ்வளவு காலமும் இல்லாத அடிப்படையில் ஒரு கண் பார்வை அற்றவரை தேசிய மக்கள் சக்தி தமது தேசிய பட்டியலில் சேர்த்துள்ளது,
அது மட்டுமல்லாமல் கேகாலை மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான பாலினத்தை சேர்ந்த ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.
ஆதலால் குருநாகல் முஸ்லிம்கள் சம்பந்தமாக எமது ஒரு முஸ்லிம் பிரதி நிதியை நாம் தெரிவு செய்வதில் பெரும்பான்மை சமூகம் நாம் இனவாதம் பேசுவதாக நினைக்க கூடாது. கடந்த காலங்களில் இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள் வடமேல் மகாணத்திட்கு நியமிக்க பட்டிருந்தாலும், அவர்கள் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சனைகளை அடையாளம் காணவில்லை.
அதிலும் அவர்கள் தாம் சார்ந்த அரசியல் தலைவர்களின் திருப்தியில் அதிக அக்கறை காட்டுபவர்களாக இருந்து தமது அதிகாரங்களை பயன்படுத்தியதால் எங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இப்படியான கடந்த கால கசப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் இந்த தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த குருநாகல் மாவட்ட முழு முஸ்லிம்கலும் எதுவித பேதமுமின்றி வாக்காளிக்க வேண்டும்,
எனது முழு ஒத்துழைப்பும் நான் சார்ந்த அரசியலை மறந்து குருநாகல் மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பாராளுமன்றம் அனுப்புவதாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார்.
Post a Comment