ஆபத்தான திருடன் குறித்து, அதிமுக்கிய எச்சரிக்கை (ஜாக்கிரதை)
நம் வாழ்வில் மிகவும் ஆபத்தான திருடன் யார் தெரியுமா...? நம் பொன்னான காலநேரம் தான்.
காலநேரம் என்பது விலைமதிக்க முடியாத மூலதனம், காசு பணத்தால் பெறுமதி போட முடியாதது. நம்மால் அதனை சொந்தமாக்க முடியாது. ஆனால் அதில் நாம் தாராளமாக முதலீடுகள் செய்துகோள்ளலாம்.
அதில் கழிந்து போகும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் வாழ்நாளில் கழிந்து போகும் நோடிப்பொழுதாகும். கோடி பணம் கொடுத்தும் மீட்டெடுக்க முடியாது.
நேரமென்பது கைதேர்ந்த ஒரு திருடன். நாம் விழிப்புடன் அவதானமாக இருக்க விட்டால் நம் துடிதுடிப்பான இளமைப் பருவத்தையும் வாழ்நாள் முழுவதையும் சொல்லாமல் கொள்ளாமல் தன் பாட்டில் திருடிக்கொண்டு சென்றுவிடும்.
காலநேரத்தோடு கூட்டுச் சேர்ந்து கும்பலாக நம் வாழ்நாளை திருடும் சில ஜுனியர் திருடர்களை இங்கே உங்களுக்காக பட்டியலிடுகிறார். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
🥷 தள்ளிப்போடுதல்
🥷 எதிர்மறை எண்ணங்கள்
🥷 பிற்போடும் பழக்கம்
🥷 இலக்குளை பட்டியல் போடாமை
🥷 தனிமை உணர்வு, மனவெறுமை
🥷 விரக்கதியை வரவழைத்தல்
🥷 தன்னம்பிக்கை இன்மை.
🥷 பயம், தயக்கம், கவனச்சிதறல்,
🥷 தடுமாற்றம், மனக்குழப்பம்
🥷 இது போன்ற ஏகப்பட்ட எதிர்மறை உணர்வுகள்
நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தயங்காமல் தள்ளிப்போடாமல், சாக்குப் போக்குகள் கற்பிக்காமல் புத்துணர்வோடு வாழ ஆரம்பிப்பதாகும். நீங்கள் பயணிக்க ஆரம்பித்தால் பாதையின் பாதிக்கு வந்து விட்டார்கள் என்பதை என்றும் மறக்காதீர்கள்.
இமாம் ஹஸன் பஸரின் இந்த வாசகம் என்றும் உங்கள் கண் முன் இருக்கட்டும்:
மனிதனே!
நீ என்பது சில நாட்கள்தான். ஒரு நாள் கழித்து விட்டால் உன்னில் ஒருசிலது கழித்து விட்டது என்று அர்த்தமாகும்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment