லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ள விசயம்
தற்போதைய மோதல் நிலைமைக்கு மத்தியில் பாதுகாப்பின்மையை உணரும் பட்சத்தில் மீண்டும் நாட்டிற்கு திரும்பிச்செல்வதற்காக பதிவு செய்ய முடியுமென தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்காக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இன்றும்(27) திறக்கப்பட்டுள்ளது.
பதிவு நடவடிக்கைகளுக்காக கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுசெல்லுதல் கட்டாயமானதென தூதரகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின் தமது முதலாளியின் எழுத்துமூலமான ஒப்புதலைப் பெற வேண்டும்.
இதனிடையே, வான்வழித் தாக்குதல்கள் தொடர்பான முன் அறிவிப்புகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
தாக்குதல்கள் நடத்தப்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளை விட்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தேவையற்ற பயணங்களை தவிர்த்து இயலுமானவரை தத்தமது பணியிடத்தில் இருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 00 961 791 255 89 என்ற இலக்கத்தினூடாக தூதரகத்தை தொடர்புகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment