Header Ads



புதிய விசேட வரி விதிக்கப்பட்டுள்ளதா..?


5 வகையான பொருட்களுக்கு புதிய விசேட வர்த்தக பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் பொய் பிரச்சாரங்கள் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


2023 ஒக்டோபர் மாதம் 14 திகதியிட்ட இல. 2353/77  வர்த்தமானி அறிவித்தலின் ஒரு வருட செல்லுபடியாகும் காலம் 2024 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்ததால்,  அதனை 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் இல. 2406/02 ஊடாக மீண்டும் அதேவாறு  2024 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதனூடாக, அரசாங்கத்தினால் புதிதாக வரி விதிப்பு ஒன்று மேற்கொள்ளவில்லை எனவும், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 25 சத மானிய வரி அவ்வாறே அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மீன்பிடித் தொழிலையும், பழ சாகுபடியையும் பாதுகாக்கும் நோக்கில், அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு ஏனைய 04 பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரி விதிப்புக்கள் அதே போன்று நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.


பொதுவாக, இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்திற்கு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்ற போதிலும், இந்த வரிகள் குறித்த முறையான ஆய்வில் கவனம் செலுத்தி தற்போதுள்ள வரித் தொகையை 31.12.2024 வரை மட்டுமே பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.