தேங்காய் குறித்து, ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ள விடயங்கள்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக கலாநிதி நயனி ஆராச்சிகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தென்னை பயிர்ச்செய்கை பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பம் என்ற இரண்டு பிரதான காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, எதிர்பார்த்ததை விட குறைவான விளைச்சலே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய் பருப்பு இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
“கொழும்பு தேங்காய் ஒப்சன் ஊடாக குறிப்பிட்ட அளவு தேங்காய் விற்பனை செய்யப்படும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.
தேங்காய் ஏலத்தை 100 ரூபாவிற்கு நடத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்காக தேங்காய் தேங்காய் பருப்பை இறக்குமதி செய்ய முன்மொழிந்துள்ளோம், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை" என்றார்.
Post a Comment