Header Ads



அநுரகுமாரவிடம் வீரசேகர எழுப்பியுள்ள கேள்வி


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சில மாதங்களுக்கு முன்னர் தம்வசம் இருப்பதாக தெரிவித்த ஊழல் கோப்புகள் எங்கே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். 


பொதுஜன பெரமுன கட்சியின் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார். 


அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,


"இந்நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகளின் ஊழல் கோப்புகள் தன் வசம் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். 


இப்போது அவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த ஊழல் கோப்புகள் குறித்த விசாரணைகளுக்கு அவர் உத்தரவிட முடியும். ஆனால் அவர்  இதுவரை அப்படி உத்தரவிடவில்லை. 


அதேநேரம், பொதுமக்களுக்கு ஏராளம் நிவாரணங்களை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தே இவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளார்கள். 


எனவே, ஊழல் கோப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இந்த அரசாங்கம் எப்போது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.