பெருந்தொகை பணம் அச்சிடு, கோட்டாபய யுகம் நினைவிற்கு வருவதாக ரோஹினி தெரிவிப்பு
அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தீயுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி சுமார் நூறு பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏல விற்பனை மற்றும் தவணை ஏல விற்பனை ஆகியனவற்றின் மூலம் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 25ம் திகதி ஏல விற்பனை மூலம் 36.16 பில்லியன் ரூபா பணத்தையும், கடந்த வாரம் தவணை ஏல விற்பனை மூலம் 70 பில்லியன் ரூபாவினையும் அரசாங்கம் அச்சிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இவ்வாறு பணத்தை அச்சிடுவதன் மூலம் கப்ரால் – கோட்டாபய யுகம் நினைவிற்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் பணம் அச்சிடுவதனை வரையறுக்க வேண்டும் என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார இருண்ட பாதையில் பயணிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment