சேக் ஹசீனாவை கைது செய்யுமாறு பிடியாணை
பங்களாதேஸின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று (17) முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்முறை போராட்டங்களின் போது வெகுஜன படுகொலைகளில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பங்களாதேஸின் பொதுத்துறை வேலை ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பின்னர் வன்முறையாக மாற்றம் அடைந்ததது.
1971ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இடம்பெற்ற கொடிய அமைதியின்மையாக அது கருதப்பட்டது.
இதன்போது, 700க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் பலர் காயங்களுக்கு உள்ளாகினர். இதனையடுத்து ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தநிலையில், நாட்டை, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment