Header Ads



அநுரகுமார வழங்கிய உறுதிமொழியும், கர்தினால் கொடுத்த நற்சான்றிதழும்


 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  நேர்மையான விசாரணைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில  வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்த தாக்குதலுக்கு நீதி அவசியம் என்றும், இதில் கட்சியோ, நபரோ முக்கியமில்லை என்றும் கர்தினால் கூறியுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் கேட்டதாகவும், அவரும் உண்மைகளை மறைக்க இடமளிக்மாட்டேன் உன உறுதியளித்தாக கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தியதோடு, உதய கம்மன்பில இந்த விடயம் குறித்த இவ்வாறு நாடகமொன்று அரங்கேற்றியிருப்பது வருத்தமிளப்பதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார். 


முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் தற்போதைய அரசாங்கம் மறைக்க முயல்வதாக கூறி உதய கம்மன்பில இரண்டு அறிக்கைகளில் ஒன்றை நேற்றையதினம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார்.


No comments

Powered by Blogger.