Header Ads



பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் மீதான விசாரணை ஆரம்பம்


பிரித்தானியாவுக்கான (இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் நேற்று (29) குறிப்பிட்டுள்ளார். 


உயர்ஸ்தானிகர் பயன்படுத்திய கார் தொடர்பான அறிக்கைகளை அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.


எனினும், உயர்ஸ்தானிகரின் நிதியிலேயே இந்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக இலங்கை அரசின் எந்த நிதியும் செலவிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார். 


இந்தநிலையில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், அரசியல் விசுவாசத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் உரிய காலத்தில் மீள அழைக்கப்படுவார்கள் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.