Header Ads



ஹிஸ்புல்லாக்களை காட்டிக்கொடுத்த இஸ்ரேலிய உளவாளி கைது


லெபனான் அல்-நுவைரியில் இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு இஸ்ரேலிய உளவாளியை பாதுகாப்பு சேவைகள் கைது செய்துள்ளதாக லெபனான்24 தெரிவித்துள்ளது.


அண்மைக் காலமாக பணத்திற்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் தளபதிகள் காட்டிக் கொடுக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிலையிலேயே ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு இடத்திலிருந்து  இஸ்ரேலிய உளவாளி கைதான தகவல் வெளியாகியுள்ளது.


காஸாவிலும் ஹமாஸ் செயற்பாடுகளை இஸ்ரேலுக்கு காட்டிக்கொடுத்த சிலர் அண்மையில் கைதானமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.