Header Ads



ஓமான் வர்த்தகர் மீது தாக்குதல் - முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் கைது


முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.


கந்தானை பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்த ஓமன் வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களை நாசம் செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2022ஆம் ஆண்டு, கந்தானை பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையை நடத்தி வந்த ஓமான் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து அவரை கொடூரமாக தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தனர்.


இந்த தொழிலதிபருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையின் போக்குவரத்துக்கு லொறிகளை பயன்படுத்தியமையே தாக்குதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு அவரின் உத்தரவின் பேரில் வர்த்தகர் மற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் முன்னர் நான்கு சந்தேகநபர்களை கைது செய்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்த நிலையில், மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.