Header Ads



இலங்கையில் சீன உணவுகளை, சாப்பிடுவோரின் கவனத்திற்கு


சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் காலாவதியாகும் திகதி மாற்றப்பட்டதன் பின்னர் அவற்றை மீள் விற்பனை செய்யும் மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இந்த மோசடி கும்பலை, நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல சீன உணவு விற்பனை நிலையத்தில் சீன உணவுகள், மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


சீன உணவுகளை விரும்பும் இலங்கையர்களும் சீனர்களும் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.


இத்தகைய பின்னணியில் காலாவதியான பொருட்களின் லேபிள்களை மாற்றி மீண்டும் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.


அதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.


அங்கு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.


அங்குள்ள சில பொருட்களுக்கு காலாவதி திகதி கூட இல்லை. மேலும் அங்கு காலாவதியான மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


பின்னர், மூன்று தளங்கள் கொண்ட டைக்கு, வாடிக்கையாளர் சேவை ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

No comments

Powered by Blogger.