பரபரப்பாக ஜனாதிபதி செயலகம் - சுறுசுறுப்பாக அநுரகுமார
தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மிகவும் மும்முரமாகவும் பரபரப்பாகவும் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய நாட்களில் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர்.
இதன்போது பல நாடுகளின் அரச தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமன்றி ஆதரவையும் வழங்கியமை விசேட அம்சமாகும்.
அதிகளவான வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது.
சில நாட்களில், ஒரு நாளில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதுவர்களை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் நள்ளிரவு கடந்தும் அதிகாலை 2 மணி வரை பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் மீண்டும், மறுநாள் காலை 8:00 மணியளவில் வேலைக்குத் திரும்புகிறார்கள், பின்னர் நள்ளிரவு வரை தங்கள் வேலையை செய்வதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி புரியும் அரச ஊழியர்களுக்கும், தமது பணிகளை விரைவாகவும், சிரத்தையாகவும் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment