யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது - கோட்டாபய பிடிவாதம்
2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அவரது சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஊடாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டா, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார்.
Post a Comment