நீரிழிவு நோயாளிகளுக்கான சிகிச்சையை கண்டுபிடித்த பாத்திமா ருமைஸா
பள்ளி கல்விக்கு பின் கேரள பல்கலைக்கழகத்தின் காரியவட்டம் வளாகத்தில் B.Sc. , Bio Chemistry பாடத்தில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து அதே கல்லூரியில் 2018ல் M.Sc. , Bio Chemistry முதல் ராங்குடன் தேர்ச்சி பெற்றதுடன் அடுத்த ஆண்டு பயோ கெமிஸ்ட்ரி பாடத்திலேயே M.phil ஆய்வும் முடித்தவர்.
2019ல் பாலராமபுரத்தை சேர்ந்த ஷபீக் இவரை திருமணம் செய்த பின்பு பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தினரின் ஊக்கம் காரணம் கேரள பல்கலைக்கழகத்தின் Advance Centre For Tissue Engineering ல் பயோ கெமிஸ்ட்ரி பாடத்திலேயே P.hd ஆராய்ச்சி மாணவியாக 2021ல் பதிவு செய்தார்.
நீரிழிவு நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு காயங்கள் நாள்பட்ட நிலையில் ஆறாத புண்களாகி, அந்த உறுப்புகளை கூட முறித்து மாற்றுவதற்கு பதிலாள் மருந்து கண்டிபிடிக்க தனது ஆய்வை தொடர்ந்த ருமைஸா தாவரங்கள், காய்கறிகள், அரிசி, கோதுமையில் காணப்படும் ஃபெறூலிக் அமிலம் நாள்பட்ட புண் காயங்களை குணப்படுத்த உதவும் என்று முதல்கட்டமாக கண்டுபிடித்தார்..
தொடர்ந்து நான்கு வருடங்கள் ஃபாத்திமா ருமைஸா வின் நீண்ட ஆய்வு முடிவில் Hydrogel Dressing எனும் நாள்பட்ட காயங்களுக்கு கட்டுப்போடும் சிகிச்சை முறைக்கு "Synthetic Of Ferulic Acid Incorporated Alginate Dialdehyde Gelatin Hydrogel Film" என்ற ஆய்வறிக்கை தயாரானது..
இவரது Hydrogel Dressing ஆய்வுகள் இவரது ஆய்வு வழிகாட்டி பேராசிரியை எஸ்.மினி முயற்சியில் பல்கலைக்கழகம் மூலம் விண்ணப்பித்து 20ஆண்டுகளுக்கு காப்புரிமையும் கிடைத்துள்ளது.
HYDROGEL DRESSING எனும் காயங்களுக்கு கட்டுப்போடும் சிகிச்சை முறை கண்டுபிடிப்பு Anti Oxidant, Anti Microbial Anti Inflammatory, Anti Diabetic Effect என்று பல்வேறு சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்றும், நாள்பட்ட காயங்களுக்கு இந்த ஜெல்லுடன் கூடிய துணிகளை பயன்படுத்தி கட்டுப்போடும் போது இரண்டு முதல் மூன்று வாரங்களில் முழுமையாக நிவாரணம் கிடைக்கும் என்பதுடன் தோலின் காயத்தின் நிறத்தில் கூட மாற்றம் காணும் என்பது மருத்துவத்துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது..
ஃபாத்திமா ருமைஸா வின் அரிய அறிவியல் கண்டுபிடிப்பு பயனுள்ள வகையில் அமைந்திட அவாவும்... துஆவும் ...
Colachel Azheem
Post a Comment