உரிமை மீறல் மனுவில், பிரதிவாதியாக ரணில் உள்ளீர்ப்பு
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக சேர்க்க, மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (29)அனுமதி வழங்கியுள்ளது.
தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகிக்காத காரணத்தினால், அவரை பிரதிவாதியாக இணைத்து மனுவின் தலைப்பில் திருத்தம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார்.
இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக சேர்க்க மனுதாரர்களுக்கு நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு அனுமதி வழங்கியது.
Post a Comment