Header Ads



லொறி விபத்தையடுத்து மாயமான அதிலிருந்து இறால்கள்




தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியொன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீன் லொறியில் இருந்த ஏழு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய  இறால் தொகை காணாமல் போயுள்ளதாக லொறியின் சாரதியால் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் மீன் வியாபாரியான கே. எச்.ஆர். குமார் என்பவர் நீர்கொழும்பில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு தங்காலை நோக்கி பயணித்த போது சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.


 விபத்தில் மீன் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மீன் லொறியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் லொறியில் இருந்த இறால் தொகை லொறியின் தரையிலும் வீதியிலும் சிதறிக் கிடந்திருந்துள்ளது.  


சாரதியின் சகோதரனான லொறியின் உரிமையாளர் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வந்து பார்த்த போது இரண்டு கிலோகிராம் இறால்கள் மாத்திரம்  லொறியில் இருந்ததாகவும் லொறியின் கேபினுக்குள் இருந்த இருபதாயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

No comments

Powered by Blogger.