Header Ads



எம்முடன் போட்டியிட யாரும் இல்லை, எமது வெற்றி நிச்சயமாகி விட்டது”


தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தாது, அதை இம்முறை நடைமுறையில் காட்டுவோம் என NPP உறுப்பினர் லால்காந்த இன்று தெரிவித்தார்.


"எங்களது அனைத்து அரசியல் செயற்பாடுகளிலும் தேர்தல் செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக செயற்படுவோம். அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த மாட்டோம். அதனை இம்முறை நடைமுறையில் காட்டுவோம்" என கண்டி மாவட்ட வேட்புமனுவை சமர்ப்பித்த பின்னர் கேள்வியொன்றுக்கு பதிலளித்த போது அவர் கூறினார்.


ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததால், பொதுத் தேர்தலுக்கு தேசிய மக்கள் கட்சி பாரிய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என லால்காந்த தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்களிக்காத மக்களும் ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாம் செய்த வெற்றிகரமான செயல்பாடுகளால் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.


 வெற்றிக்குப் பிறகு SLFP, UNP என அனைத்துக் கட்சிகளும் தற்போது பிரிந்துவிட்டன, எம்முடன் போட்டியிட யாரும் இல்லை. எமது வெற்றி நிச்சயமாகி விட்டது” என அவர் மேலும் கூறினார்

No comments

Powered by Blogger.