இஸ்ரேலிய படுகொலைகள், துயரங்கள் வலிகளுக்கு அமெரிக்கா முழுப்பொறுப்பு - ஹெஸ்பொல்லா
அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலால் ஈரான் மீது நடத்தப்பட்ட 'துரோக' தாக்குதல்களுக்கு வாஷிங்டனே 'முழு பொறுப்பையும்' ஏற்க வேண்டும் என்று லெபனானின் ஹெஸ்பொல்லா எச்சரித்துள்ளது.
பிராந்தியத்தில் 'ஆபத்தான விரிவாக்கம்' பற்றியும் அது எச்சரித்துள்ளது.
'ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான துரோக சியோனிச ஆக்கிரமிப்பை ஹெஸ்பொல்லா கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும் இது முழு பிராந்தியத்தின் மட்டத்திலும் ஒரு ஆபத்தான அதிகரிப்பு என்று கருதுகிறது' என்று லெபனான் ஹெஸ்பொல்லா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் ஏற்படுத்தப்பட்ட படுகொலைகள், துயரங்கள் மற்றும் வலிகளுக்கு அமெரிக்கா முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment