அரசியலில் இருந்து விலகியபின், அலி சப்ரி ஆஜராகிய முதலாவது வழக்கு
தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தில் தேவையற்ற வகையில் தலையிடவோ அல்லது இடைநிறுத்தவோ கூடாது என்று கம்பளை உடபலத்த பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (16) இடைக்கால தடை விதித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களான எம்.லாஃபர் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவு ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
எம்.டி. அம்பர் அட்வென்ச்சர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு இணங்கவே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 1,621.5 மீட்டர் ரோப்வேயுடன் கூடிய கேபிள் கார் திட்டத்தை உருவாக்க, இயக்க மற்றும் மாற்றுவதற்கான மனுதாரரின் திட்டத்திற்கு பிரதேச செயலாளரின் சட்டவிரோதமான முறையில் தலையீடு செய்கிறார். இது தங்களுடைய சேவையை முன்னெடுப்பதற்கு தடையாக உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஷெஹானி அல்விஸ் மற்றும் நமிக் நஃபத் ஆகியோர் மனுதாரர் சார்பில் ஆஜராகினர்.
Post a Comment