பள்ளிவாசல் பணியிலிருந்து, பாரதி அம்மா ஓய்வு (மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு)
கணவன் இல்லை. குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும் . என்ன செய்வது தெரியவில்லை. மன அமைதிக்காக பள்ளிவாசல் முற்றத்தையும், வளாகத் தையும் நாள்தோறும் பெருக்கத்தொடங்குகிறார். அதற்காக சம்பளம் எதுவு மில்லை. பாரதி அம்மாவின் பணிகளைப் பார்த்து தொழுகைக்கு வருபவர்கள் தங்களின் அன்பை அவரின் கரங்களில் பணமாகக் கொடுத்தனர். பாரதி அம்மா வின் வாழ்க்கை இயல்புக்குள் வந்தது.
பள்ளிவாசலும் பாரதி அம்மாவை தங்களுள் ஒருவராக அரவணைத்துக் கொன்டது, பள்ளிவாசல் தானும் ஓர் அங்கமானார். உறவுகள் அவரைச்சுற்றி இழைகள் பின்னின . பள்ளிவாசல் வருகிறவர் களின் பாட்டியாக, அம்மாவாக, சகோதரியாக அவர் மாறினார். அவரின் குழந்தைகளை பள்ளிவாசல் வழியாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வளர்த்து ஆளாக்கினார்.
வளாகத்தில் இருந்து பள்ளிவாசளின் உள்ளேயும் சுத்தப்படுத்தினார். பள்ளிவாசலின் உள்ளும் புறமும் பாரதி அம்மாவின் கரங்களில் சுத்தப்பட்டது. பாரதி அம்மாவுக்கு வயது இப்போது 73. முதுமை அவரை பணிசெய்ய அனுமதிக்க மறுக்கிறது, அவர் பள்ளிவாசல் பணியிலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
இதுவரை உள்ளது எல்லாம் இயல்பானவை . பாரதி அம்மா பணியில் இருந்து விடைபெறும்போது, பள்ளிவாசல் அவரை வழியனுப்பிய முறைதான் அழகினும் அழகு .
அவருக்கு பணிநிறைவு நிழ்ச்சி ஒன்றை நடத்தி வழியனுப்பியதுடன், பணியில் இருந்து விடை பெற்றாலும் பாரதி அம்மா எங்களில் ஒருவர். அவருக்கு நாங்கள் இனியும் செய்வோம். செய்ய வேண்டியதை அவரின் வீடுதேடி சென்று செய்வோம் என்று அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் கூறியவார்த்தைகள் நிறைவான ஒன்று .
நன்றி:
- ஷாகுல்ஹமீது -
Post a Comment