Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - நீதிபதி இமாம் விசாரணைக் அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில


பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரம் தெரிவித்ததைப் போன்று, இன்று (28) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


2023 செப்டம்பர் 05ஆம் திகதி பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியின் உண்மைகளை ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.


ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.

No comments

Powered by Blogger.