Header Ads



அதாவுல்லா மீது வழக்கு, இன்று நீதவான் வழங்கிய உத்தரவு


தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் பேரணியை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த  தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான A.L.M.அதாவுல்லா மீது வழக்கு தொடரப்பட்டு இன்று(24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இது தொடர்பாக கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (24) அவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது  தலா 50,000 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.