முஸ்லிம் அரசியல்வாதிகளின் சொத்து, விபரங்களைஆராயுமாறு கோரிக்கை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு அதிக சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது பற்றி ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் முயற்சி எடுப்பதை ஸ்ரீலங்கா உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன். இம்முயற்சி சிங்கள உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படாமல் முஸ்லிம் உறுப்பினர்களையும் ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்திருப்பதாவது,
பல முன்னாள் எம்பீக்கள், அமைச்சர்கள் குறிப்பாக முஸ்லிம் தரப்பிலும் எம்பி ஆகு முன் மிக சாதாரண வருமானம் உள்ளவர்களாகவே இருந்தனர்.
ஆசிரியராக, தொழிலதிபர்களின் கிளார்க்குகளாக, ஊடகத்தில் பணிபுரிபவராக, அகதியாய் வந்தவர்களாக, சாதாரண தொழில் அதிபராக, சில காணிகளுக்கு மட்டும் சொந்தக்காரராக என்றே இருந்தனர். ஆனால் இவர்கள் எம்பீக்கள் ஆனபின் இலங்கையின் மிகப்பெரிய சொத்துக்களின் அதிபதிகளாக உள்ளனர்.
சிலருக்கு பல பெற்றோல் செட், வெளிநாட்டில் வீடு, கொழும்பின் செல்வந்த பகுதிகளில் கோடிக்கணக்கணக்கில் பெறுமதியான வீடுகள் இன்னும் சிலருக்கு கப்பல்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆகவே அரசாங்கம் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகுமுன் இவர்களிடம் இருந்த சொத்துக்களையும் தற்போதுள்ள சொத்துக்கள் விபரத்தையும் பெற்று அதனை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.
Post a Comment