அநுரகுமார, ரணில் ஆகியோரிடம் நாமல் விடுத்துள்ள கோரிக்கை
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அவர்களை தவறாக வழி நடத்த வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரவிடம் கேட்டுக் கொள்வதாக நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இரு தலைவர்களும், அந்தந்த தேர்தல் பிரச்சாரங்களில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்ததாகக் கூறினர், ஆனால் ஒவ்வொரு தலைவரும் இப்போது பொறுப்பைத் திசைதிருப்புவதால், பிரச்சினை வேறு திசைக்கு சென்று விட்டது.
இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை தெரிவித்த அவர், அவர்களை நாட்டின் "முதுகெலும்பு" என்று வர்ணித்தார்.
"அவர்களை தவறாக வழிநடத்துவது விரக்தியையும் கொந்தளிப்பையும் மட்டுமே ஏற்படுத்தும்" என்று நாமல் எச்சரித்தார்.
இந்த விடயத்தில் அரசாங்க ஊழியர்களை தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுதியுடையவர் என்பதை வலியுறுத்திய அவர், தேர்தல் பிரச்சார கடமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
Post a Comment