முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அநுரகுமாரவின் சாட்டையடி
முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது மக்களின் பொறுப்பல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும் குறைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குறைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான செலவுகளை குறைக்க வேண்டும்.
ஜனாதிபதிக்கான செலவுகளை குறைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவிடப்படும் செலவுகள் முற்றாக குறைக்கப்பட வேண்டும். இப்போது அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம்.
சில சலுகைகள் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்படுகின்றன, சில சட்டங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
அரசியலமைப்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றறிக்கைகளை எவ்வாறு மாற்றுவது, சட்டங்களை எவ்வாறு மாற்றுவது என நாம் ஆராய்ந்து வருகிறோம்.
முன்னாள் ஜனாதிபதிகள் 163 பாதுகாவலர்கள் கோரப்படுகிறார்கள். 17 முதல் 18 அம்புலன்ஸ், கார்கள், ஜீப்புகள், BMW கோருகின்றார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை விட அதிகமான சமையல்காரர்களை கோருகிறார்கள்.
இப்படி ஒரு நாட்டை உருவாக்க முடியாது. ஜனாதிபதியான பிறகு அவர்களை கவனித்துக் கொள்வது மக்களின் பொறுப்பு என எண்ணுகின்றனர். அவர்களைக் கவனிப்பது மக்களின் வேலையல்ல.
மிக விரைவில் அவற்றை அகற்றுவோம். ஒவ்வொரு தலைவர்களுக்கும் கேட்கும் வகையில் கூறுகின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது பழிவாங்கல் அல்ல. யாரிடமும் கோபப்படுவது கூட இல்லை.
இந்த அரசியலை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும். மாண்புமிகு அமைச்சர், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே என ஏன் கூறுகின்றார்கள். இது மரியாதைக்குரிய மான்புமிகு கௌரவ சேவையாகும். இது ஒரு நல்ல சேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment