Header Ads



விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு


இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.


ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விமானங்களை சோதனை செய்தனர்.


இதனால் எவரேனும் அசௌகரியம் அடைந்திருந்தால் வருந்துகின்றோம். எங்கள் நிர்வாகம், மற்ற சேவை வழங்குநர்களுடன் சேர்ந்து, எங்கள் விமான நிலையங்களில் மதிப்புமிக்க பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயணத்தை அனுபவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் AASL தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாக ஏராளமான இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


இதேவேளை, இந்திய விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக நேற்றைய தினம் மட்டும் சுமார் 80 போலியான அறிவிப்புகள் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.