Header Ads



எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், இவ்வாறான தாக்குதல்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு உறுதியளிக்கிறேன்


- இஸ்மதுல் றஹுமான் -


  நீங்கள் எதிர்பார்க்கும் நீதி, நியாயம்  நிலைநாட்டும் நோக்கில்   விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நீதி, நியாயம் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்க, கொழும்பு பேராயர் மல்கம் கார்தினல் ரன்ஜித் அவர்களின் அழைப்பை ஏற்று நீர்கொழும்பு, கட்டுவபிட்டி சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றும்போது போது தெரிவித்தார்.

    ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

  என்னை இங்கு அழைத்ததற்காக கத்தோலிக்க பங்குத் தந்தைகளுக்கு முதலில் நன்றி செலுத்துகிறேன்.

      2019 ஏப்ரல் 21 ல் நாட்டில் பெரிய துயரச் சம்பவம் இடம்பெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ளன. நடந்த இவ்வாறான துன்பச் செயலை காலத்தால் புதைப்பதற்கு, அழித்துவிடுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இங்கு எழும் கேள்விகள் பல உள்ளன. 

    முதலாவதாக விசாரணைகளை ஆரம்பிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். சம்பூரணமான நிலைபாட்டில் இருந்துகொண்டு அதனை நிரூபிக்க சாட்சிகள் சேர்பதல்ல.

    நாம் மிகவும் திறந்த மணதுடன் தெளிவான நோக்கத்துடன் நடந்தது என்ன?, இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?, மறைந்த நிகழ்ச்சி நிரல் உள்ளதா? என்பதை வெளிப்படையாக விசாரணை நடத்துமாறு பனிப்புரை விடுத்துள்ளேன்.

    காரணங்கள் பல உள்ளன. முதலாவது சமூகத்தில் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. எமது நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான தாக்குதல்  இடம்பெற்றதா என்ற சந்தேகம் சமூகத்தில் உள்ளது.

    எமது நாட்டில் அரசியல் நோக்கத்திற்காக பல நூறு படுகொலைகளை செய்ய முடியும் என்றால் அது துன்பகரமான செயல். எமது நாட்டில் அரசியலுக்காக அவ்வாறான நாசகாரச் செயல்கள் இருந்தால் அதற்கு முடிவுகட்ட வேண்டும்.

    இரண்டாவதாக இன்னுமொரு பேச்சு சமூகத்தில் இருக்கிறது எமது நாட்டில் தாக்குதல்கள், சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக இருந்தால் அதனை தடுப்பதற்காக இருக்கும் அரச பொறிமுறை  இந்த தாக்குதலுடன் தொடர்பு பட்டிருந்ததா? என்ற சந்தேகம் உள்ளது.

   நாட்டிற்கு ஏதாவதொரு தாக்குதல், பாதுகாப்பு தொடர்பான பொறிமுறை அந்த பாதுகாப்பை உடைத்தெரிய நடவடிக்கை எடுப்பதாக இருந்தால்  எமது நாடு எப்போதும் பாதுகாப்பற்றது. தற்போதும் பாதுகாப்பற்றது. தடுக்கக் கூடிய குழுவினர் தாக்குதலில் பங்குதாரர்களானால் அது அதி பயங்கரமான நிலமையாகும். அந்தப் பக்கமாக சிந்தித்தாலும் கட்டாயமாக அந்தப் பக்கத்தால் என்ன நடந்தது என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள  வேண்டும்.

     மூன்றாவதாக 274 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட தமது பிள்ளைகள்,  உறவினர்கள் தொடர்பாக தமக்குள்ள பக்திக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். அந்தத் திசையில் பார்த்தாலும் இந்த விசாரணை நியாயமாக நடாத்தப்பட வேண்டும். மறுபக்கம் இதற்கு முதலும் பல தடவைகள் கார்தினலுக்கு நன்றி செலுத்தியுள்ளேன். இவ்வாறான தாக்குதல் நடக்கும் போது சமூக பீதி, குழப்பம் நடக்க இடமிருந்ததை பலரும் அறிவர்.  கிறிஸ்தவ பக்தர்களை இலக்கு வைத்து அந்த தேவஸ்தானங்களில்  குழப்பத்தை உருவாக்கி இரு சாராருக்கிடையே பிரச்சிணையை ஏற்படுத்தி அதன் மூலம் பாரிய பிளவும் சண்டையும் ஏற்படும் சூழ்நிலையின் பயங்கரம் இருந்தது. அந்த பயங்கரம் நிகழ்வதை தடுக்க பாடுபட்ட பங்குத் தந்தைகளுக்கு  மீண்டும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

      சமூகங்களுக்கு இடையை இணைப்பு, நம்பிக்கை பழுதடைந்தால் ஏனைய சமூகத்தினரை சந்தேகத்திலும் கோபத்திலும் பார்க்கும் சந்தர்பம் உருவானால் அது சமூக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். உயிர்தத ஞாயிறு தாக்குதல்  சொல்லக்கூடியளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

    சந்தேகத்தில், கோபத்தில் வைராக்கியத்தில் நோக்கும் நிலமை உறுவானது. இதற்கும் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.

     ஐந்து வருடங்களாக 21 ம் திகதிகளிலும் ஏப்ரல் 21 லும் வேதனையையும் நீதி தொடர்பாக உங்கள் எதிர்பார்ப்பையும் விதிக்கு வந்து வெளிப்படுத்தினீர்கள்.

  ஏப்ரல் 21ல் நீங்கள் முன்வைத்த அறிவிப்பு அவதாணம் எனக்கு புரிகிறது. அது அடையாளம் படுத்தப்பட்ட அவதாணமல்ல. வருடம் முழுவதும் நீங்கள் ஒன்றுசேர்த்த வேதனை மற்றும் நீதி தொடர்பான நம்பிக்கையை வெளிப்படுத்தினீர்கள். அது ஏப்ரல் 21 மட்டுமல்ல தினமும் நீதியை கேட்கும், நியாயத்தை எதிர்பார்க்கும் சமூகமாக உள்ளது.

   ஜனாதிபதி தேர்தலில் அரசியல் தீர்வு எடுக்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இனமக்கள் வாழும் கூடுதலான பிரதேசங்களில் மக்கள் எம்மில் நம்பிக்கை வைத்துள்ளனர். நான் நினைக்கிறேன் பல காரணங்களில் பிரதான காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி, நியாயம் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பாகும்.

     நான் உறுதியளிக்கிறேன் உங்கள் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஒன்றே.

    இந்த நாட்டின் பிரஜைகளின் நோக்கமும் எமது நோக்கமும் ஒன்றுக்காக நாம் ஆட்சியை அமைத்துள்ளோம். நீங்கள் எதிர்பார்க்கும் நீதி, நியாயத்தை நிலைநாட்டும் நோக்கில்   விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நீதி, நியாயம் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் என்று நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இவ்வாறான தாக்குதல்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு உறுதியளிக்கிறேன் என்றார்.


No comments

Powered by Blogger.