ஜம்இய்யதுஷ் ஷபாப் (AMYS) ஊழியர்களுக்கு உம்ரா வாய்ப்பு
இப்பயணத்தில் AMYS நிறுவனத்ததின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எ.ஜே.எம். வாரித் அவர்களும் நிறுவனத்தில் பணியாற்றும் ஏ.யு.எம் ஹனபி, எம்.சி அஷ்ரப், எம்.எ எம்.ஸஹீர், எ.எம் சுல்பிகார் அலி, எ.யு அலாவுதீன்; எம்.ஆர் இக்பால் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், இப்பயணத்தின் போது இரண்டு புனிதத்தலங்கள் உற்பட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும், பல சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கும் குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
முக்கியமாக இப்பயணத்தின் போது AMYS குழுவினர் மக்காவில் அமைந்துள்ள 'கிஸ்வதுல் கஃபா' என்றழைக்கப்படும் புனித கஃபாவை சுற்றி போர்த்தப்பட்டுள்ள போர்வையை தயாரிக்கும் தொழிற்சாலையான மன்னர் அப்துல் அஸீஸ் வளாகத்திற்கு விஜயம் செய்ததுடன் அவர்களது மகத்தான சேவையை பாராட்டி தொழிற்சாலையின் பிரதானி ஒருவரிடம் நினைவு சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
அதே போன்று மதீனாவில் அமைந்துள்ள சவூதி அரேபிய அழைப்பு, வழிகாட்டல் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் கீழ் இயங்கும் புனித அல் குர்ஆன் பிரதிகளை அச்சிடும் மன்னர் பஹ்த் அச்சக வளாகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு உலக முஸ்லிம்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மகத்தான இச்சேவையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் வளாகத்தின் பிரதானி அஷ் ஷெய்க் ஹிஸாம் அல் அவ்பி அவர்களிடம் நிறுவனத்தின் சார்பாகவும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் நினைவு சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் AMYS நிறுவனத்ததில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் வகையில் றியாத் நகரில்; உள்ள உயர் பாதுகாப்பு களகம் ஒன்றில் சான்றிதழ்களும் பரிசில்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஷ் ஷெய்க் அமீர் அஜ்வத் அவர்கள் கலந்து கொண்டதுடன், யுஆலுளு நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் ஜும்ஆன் அலி அல்ஸஹ்ரானி அவர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது உரை நிகழ்த்திய மௌலவி தாஸீம்; இலங்கையில் சவூதி அரேபியா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான பணிகளைப் பாராட்டி, மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவூத் அவர்களுக்கும் முடிக்குரிய இளவரசர் முகம்மத் பின் ஸல்மான் அவர்களுக்கும் இலங்கையின் சமகால தேவைகளை கண்டறிந்து காத்திரமான பணிகளை செய்து வரும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்களுக்கும் அனைத்து சவூதி நாட்டவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Post a Comment