50 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் போட்டியிடவில்லை
இவ்வருடம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் 50இற்கும் மேற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் போட்டியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, பாட்டலி சம்பிக்க ரணவக, விமல் வீரவன்ச உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் போட்டியிடாத முதலாவது தேர்தலாகவும் இந்த தேர்தல் அமைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தீர்மானமிக்க தேர்தலாக இது மாறியுள்ளது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை 50 க்கும் மேற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment