Header Ads



3 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை - அபராதமும் விதிக்கப்படும்


தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. 


பத்தரமுல்லே சீலரத்ன தேரர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பிக்காதவர்கள் என டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறினார்.


“செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் பட்டியல் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்” என ரத்நாயக்க தெரிவித்தார்.


இந்தக் காலக்கெடுவிற்குள் அறிக்கையை வழங்கத் தவறிய வேட்பாளர்களுக்கு 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் கீழ் ரூ.100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.


தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.