Header Ads



அலோசியஸ்சிடமிருந்து 3.5 பில்லியன் பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் திட்டம்


ரூ. 3.5 பில்லியன் வரி செலுத்தத் தவறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இன்று -15- தெரிவித்தார்.


சந்தேக நபர் வரி செலுத்தத் தவறியமைக்கான தண்டனையாகவே சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்காக மாத்திரம் அரசாங்கத்திற்கு ரூ. 3.5 பில்லியன் வரி பணம் கிடைத்து விடாது எனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த சந்திப்பில் அவர் கூறினார்.


அந்த வரிப்பணத்தை மீட்கும் விடயத்தில் நாம் தலையிட வேண்டும்.3.5 பில்லியன் வரிப்பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.