இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி
இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி நிகழ்ச்சி முடிவுற்றது. இந்நிகழ்ச்சி ரத்மலான நெஸ்ட் எகடமியில் 26-27 Oct- நேற்றும் முன்தினமும் நடைபெற்றது.
ஜாமி நளீமியா (பேருவள ) , மக்கியா அரபுத் கல்லூரி (காலி), தீனியா அரபுக் கல்லூரி (பான துற ) , தாருள் உலூம் அரபுக் கல்லூரி (மொரடுவ- எகொடவின), ஹூமைதியா அரபுக் கல்லூரி ( ஊறுகொடவத்த - கொழும்பு), ஈமானிய அரபுத் கல்லூரி ( திஹாரி) ஆகிய நிறுவனங்கள் களில் இருந்து இப்பயிற்சியில் 28 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக நாவலிப்பிட்டி தாருள் உலூம் ஹாஷிமியா அரபுக் கல்லூரின் விரிவுரையாளர் அல்ல- ஆலிம் S மஜீம் யூசுபி (இந்தியா) மற்றும் மூதூரி ரப்புதுல் ஜன்னா அரபுக்கல்லூரின் விரிவுரையாளர் அல்- ஆலிம் N.M. சில்மி நூரி அவர்களும் மகத்தான பணி செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடுகள் ரத்தமளான பள்ளி வாயல் இலவசமாக செய்து கொடுத்ததுடன் நெஸ்ட் எகடமி வகுப்பறை மற்றும் மாநாட்டு மண்டப வசதிகளை இலவசமாக வழங்கியது.
இன்ஷா அல்லாஹ். அரபுக்கல்லூரி இறுதி வருட மாணவர்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து இத்ததைய பல பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட வுள்ளன. இந்நிகழ்ச்சிகள் ஊடாக சுமார் 200 - 300 மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர். அவர்களிலிருந்து அடையாளம் செய்யப்படும் 20 -50 மாணவர்கள் 2025 ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்படவுள்ள ஆறு மாத பயிற்சி நெறியில் பங்கு கொள்ள தகுதி பெறுவர். இப்பயிற்சி நெறி சரிவதேச பயிற்றுவிப்பாளர்களது உதவியோடு ஏற்பாடு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்!
இலங்கை அரபு எழுத்தணி கழகம் 2017ம் ஆண்டு நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment