எமது ஆட்சியில் அரச ஊழியர்களின், சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம்
எமது அரசாங்க ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளங்களை ஆறு மாதங்களில் அதிகரிப்பதாக தற்போதைய அரசாங்கம் முன்னதாக கூறிய போதிலும் தற்பொழுது அவ்வாறு செய்ய முடியாது என கூறியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் செயற்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுவது தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ள இன்னும் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார மேடைகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சம்பளங்களை உயர்த்துவதாக தேசிய மக்கள் சக்தி கூறிய போதிலும் தற்பொழுது சம்பளம் அதிகரிக்க முடியாது என கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment