Header Ads



215 பயணிகளுடன் சவுதிக்கு சென்ற விமானம் மீண்டும் தரையிறக்கம்


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நோக்கி, வியாழக்கிழமை (10) இரவு  புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 01 மணித்தியாலங்கள் 35 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது


 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-265 215 பயணிகளுடன் 10/10 மாலை 06.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.


 இந்த விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10/10 இரவு 07.50 மணிக்கு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.


 இங்கு சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்குச் செல்ல வேண்டிய விமானப் பயணிகளை வேறு, மாற்று விமானங்கள் மூலம் அனுப்ப ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்ததுடன், மீதமுள்ள விமானப் பயணிகளை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.


 தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய ஏ.330 விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.