ஒரு முட்டையின் உற்பத்திச்செலவு 20 முதல் 23 ரூபாய் மட்டுமே
சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை. சந்தையில் முட்டை விலை 40 முதல் 45 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஒரு முட்டையின் உண்மையான உற்பத்திச் செலவு 20 முதல் 23 ரூபாய் வரை மட்டுமே செல்லும்.
பண்ணையில் இருந்து 30 ரூபாய்க்கு முட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும். சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment