ஆசீர்வதிக்கப்பட்ட பாலஸ்தீனம் பற்றி 19 முக்கிய தகவல்கள்
🇪🇭 வரலாறு நெடுகிலும் தூதரார்கள், நபிமார்கள் வாழ்ந்து மறைந்த தேசமாகும். நம் பிதா மாமனிதர் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்த மண்ணுக்கே இடம்பெயர்ந்து வந்தார்கள்.
🇪🇭 மானக்கேட்டான காரியம் செய்து வந்த, இறை தூதர் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமூகம் அழிக்கப்பட்ட பின்னர் அவருக்கும் அவருடனிருந்த விசுவாசிகளுக்கும் இந்த மண்ணில்தான் இறைவன் அபயமளித்தான்.
🇪🇭 மாவீரர் நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இங்குதான் வாழ்ந்தார்கள், இங்குதான் அவரது தேவாலயத்தை கட்டியெழுப்பினார்கள்.
🇪🇭 இங்கிருந்தவாறுதான் மாமன்னர் நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உலகை ஆண்டார். அவரது பேரரசின் கம்பீரம் சொல்லி விளக்க வேண்டியதில்லை என்ற அளவுக்கு சரித்திரப் புகழ்வாய்ந்தது.
🇪🇭 இங்குதான் நபி ஸகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது மடத்தில் தவமிருந்து வந்தார்.
🇪🇭 "புனித பூமிக்கு புறப்படுங்கள்" என்று நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தனது சமுதாயத்தினருக்கு கட்டளையிட்டதும் இந்த பூமியை பார்த்துத்தான்.
🇪🇭 இறை மறுப்பும் இணைவைப்பும் இல்லாத தூய பூமி என்பதாலும், நபிமார்கள், தூதர்களின் வாழ்விடம் என்பதாலும் இந்த மண்ணை புனித பூமி என்று அழைக்கப்படுகிறது.
🇪🇭 மாபெரும் தெய்வீக அற்புதங்கள் இந்த மண்ணில்தான் நிகழ்ந்ததன. கன்னிப் பெண் அன்னை மரியம், தந்தை அற்ற தனையனான (யேசுநாதர்) நபி ஈஸாவை பெத்லகோம் நகரில் பெற்றெடுத்தாள்.
🇦🇪 பச்சிளம் குழந்தையாக தொட்டிலில் இருந்த மர்யமின் புதல்வர் ஈஸா பேசிக் காட்டி அற்புதம் நிகழ்த்தியதும் இங்கேதான்.
🇪🇭 இறை தூதர் ஈஸா முறைதவறிப் பிறந்தவர் என இஸ்ரவேலர்கள்(யூதர்கள்) அவரை தீர்த்துக்கட்ட முனைந்த போது அல்லாஹ் அவரை இங்கிருந்துதான் மேலுலகுக்கு உயர்த்திக் கொண்டான்.
🇪🇭 யுக அழிவு நாள் நெருங்கும் போது இயேசு (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மேலுலகிலிருந்து இங்கே உள்ள வெள்ளை மினாராவில் வந்திறங்குவார். பித்தலாட்டக்காரன் தஜ்ஜாலுக்கு முடிவு கட்டுவார், சிலுவையை உடைத்தெறிவார். பல மார்க்கங்களை ஒரு மார்க்கமாக மாற்றியமைப்பார்.
🇪🇭 இவ்வுலகம் அழிந்த பிறகு மறு உலகில் மானிடம் மீள் உயிர்த்தெழுப்பப்படு ஓன்று கூடும் மைதானமும் இந்த பூமியில்தான்.
🇪🇭 அட்டகாசம் செய்யும் யஃஜுஜ் மஃஜுஜ் சமுதாயம் இங்குதான் அழிக்கப்படுவார்கள்.
🇪🇭 புனித இல்லமான அல்-அக்ஸா பள்ளிவாசல் இங்கேதான் உள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல, உலக முஸ்லிம்கள் அனைவரினதும் புனிதஸ்தளமாகும்.
🇪🇭 முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் அதுதான். புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட மூன்றாவது பள்ளிவாசலும் அதுதான்.
🇪🇭 அல்லாஹ்வால் அவனது தூதர் முஹம்மது (அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம்) அவர்கள் (இஸ்ராஃ) இராப்பயணம் அழைக்கப்படு, பின்னர் (மிஃராஜ்) மேலுலகப் பயணம் செய்ததும் இங்குதான்.
🇪🇭 அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொழுப்படும் ஒரு தொழுகையின் மதிப்பு 500 தொழுகைகளுக்குச் சமமானதாகும்.
🇪🇭 பாலஸ்தீன மண் உலக முஸ்லிம்களின் நாடித்துடிப்பாகும், அதனை மீட்டெடுக்க ஒத்துழைப்பது கொள்கை கோட்பாடு சார்ந்த வணக்கமாகும்.
🇪🇭 ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட் இந்த மண்தான் இப்போது அக்கிரமக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!
✍ முஹம்மத் ஸாதிக் ஹுஸைனி
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment