Header Ads



வீடுகளை கையளிக்காத 14 முன்னாள் அமைச்சர்கள் விபரம்


முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


இவர்களில் வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக வக்கம்புர, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா, முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பெருந்தோட்டக் கைத்தொழில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம , முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, முன்னாள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.


பொதுத் தேர்தலுக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், மேற்குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது.


No comments

Powered by Blogger.