Header Ads



13 வயதில் பரீட்சைக்கு முகங்கொடுத்து சித்தியடைந்த இரட்டையர்கள்


13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் தொடர்பிலான செய்தியொன்று களுபோவில பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.


நுகேகொட களுபோவில அன்டர்சன் வீதி பகுதியில் வசிக்கும் இந்த இரண்டு இரட்டை சகோதரர்களில் பெண் பிள்ளையான டபிள்யூ.பி.பி. நித்திகா சத்யா, நுகேகொட, சென்.ஜோன்ஸ் (மகளிர்) கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் போது, ​​அண்மையில் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கு முகம்கொடுத்து, பரீட்சையில் ஏழு திறமைச் சித்திகளையும் ஒரு சாதாரண சித்தியையும் பெற்றுள்ளார்.


மேலும், அவருடன் அதே பரீட்சைக்கு முகம்கொடுத்த கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் இவரது சகோதரன் டபிள்யூ.பி.பி. நிஷான் சஹாஜித் என்ற மாணவனும் இதே போன்று சித்தி பெற்றுள்ளார்.


சிறுவயதிலேயே சாதாரணதர பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில் இரு பிள்ளைகளும் குறித்த பாடசாலைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய நிலையில், தனியார் கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இந்தச் சாதனையை எட்ட முடிந்ததாக இரட்டைச் சகோதரர்களின் தந்தை டபிள்யூ. பி. பி.நிஷாந்த தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.