மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு, UNP க்கு ஏமாற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் கூட்டணியில் இணையாது என அந்த முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அரசியல் பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுவதால், அடிமட்ட அளவில் திட்டங்களை வகுத்து, கட்சி மீண்டும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் வகையில் செயல்படும்” என்றார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment