Header Ads



SJB யில் இம்தியாஸ், கபீருக்கு முக்கிய பதவிகள் - சஜித்தின் அதிரடி நடவடிக்கை


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்கள்.


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(27) நடவடிக்கை எடுத்தார். 


இதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களும், 


2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் அவர்களும்,


 ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களும் இன்று(27) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.