பணம் பறிக்கும் PHI க்களிடம் சிக்க வேண்டாம்
தம்மை பொதுச் சுகாதார பரிசோதகர்களாக காட்டிக்கொண்டு பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என, வர்த்தகர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மைய காலமாக தம்மை பொதுச் சுகாதார பரிசோதகர்களாக காட்டிக்கொண்டு, வியாபாரிகளுக்கு சலுகைகளை வழங்க அல்லது வழக்குத் தாக்கல் செய்யாமல் இருக்க என தெரிவித்து பணம் கோரும் மோசடிகள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நேற்று (02) தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து, தம்மை பொதுசுகாதார பரிசோதகராக அல்லது பொலிஸாராக காட்டிக் கொண்டு பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் சில மோசடியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவ்வாறான அழைப்புகள் கிடைத்தால் அது தொடர்பில் தமது பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு காரணத்துக்காகவும், எந்தவொரு பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் யாரும் பணம் செலுத்த தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடியாளர்கள் வங்கி கணக்கு இலக்கத்தை வழங்கி அதில் பணத்தை வைப்பிலிடுமாறு கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment