NPP ஆட்சியமைத்தால் நாடு அநாதரவாகும், ரணில் - அநுரகுமார இரகசிய உடன்பாடு - மகிந்த
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுரகுமார திசாநாயக்வுக்கும் இடையில் இரகசிய உட்பாடு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
அதற்கமையவே அண்மையகால செயற்பாடுகள் இடம்பெறுவதாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் மகிந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியினால் இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மறி ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் கட்சி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது.
அலுவலகங்களைத் தவிர மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி கட்சியினால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என மகிந்த கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடு அநாதரவாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை ஆள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment