Header Ads



மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை NPP வழங்காது


இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.


ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பௌத்தம், சிங்களக் கலாச்சாரம் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (ACBC) ஒழுங்கு செய்த கூட்டத்தின் போதே NPP பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த உறுதிமொழியை வழங்கினார்.


ஒரு NPP அரசாங்கம் நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் அதே வேளையில் அரசியலமைப்பின் 9 வது சரத்தை பாதுகாத்து நிலைநிறுத்தும் என்று கூறிய அவர், அதற்காக ஜே.வி.பி பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து செய்வதாகவும் உறுதியளித்தார்.


13வது திருத்தத்தை தற்போதைய வடிவில் மட்டுமே அமுல்படுத்துவோம் எனவும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை NPP வழங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


13வது திருத்தம் தேசிய பிரச்சினை அல்லது மாகாண அபிவிருத்திக்கான தீர்வு அல்ல என்ற கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.