தேர்தலில் NPP வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் வன்முறையைத் தூண்டலாம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"மக்கள் விடுதலை முன்னணிக்கு வன்முறைப் புரட்சியில் வேரூன்றிய வரலாறு இருக்கின்றது. நீண்ட காலமாக அக்கட்சி ஒரு கல்லைக் கூட எறியவில்லை. ஆனால் 2022இல், புதைக்கப்பட்ட ஜனநாயக விரோத வன்முறை மீண்டும் தலைதூக்கியது.
அரகலய போராட்டத்தில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டிருந்தமை ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். ஆனால், இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியினரே போராட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான, சுனில் ஹந்துநெத்தி மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோர் வன்முறையைத் தூண்டியவர்கள்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், அவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டலாம் என்ற கவலை எழுகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் 1999இல் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்த நந்தன குணதிலக்க, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment