Header Ads



NFGG யினால் வெளியிடப்பட்ட கேள்வியும், பதிலும்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்களை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் மேற்படி தலைப்பில் இன்று NFGGயினால் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் இருந்து ஒரு முக்கிய கேள்வியும் அதற்கான பதிலும் இங்கே பிரசுரிக்கப்படுகிறது:

இனவாதத்தை பரப்பிய பலரும் எஸ்.ஜேபி அணியில் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. அது பற்றிய  பார்வை என்ன..?


கடந்த காலங்களில் இனவாதம் பேசிய சம்பிக்க போன்றவர்களும் சஜித் அணியில் இருப்பது பற்றியே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. 


ஒரு யதார்த்தத்தை  இங்கே புரிந்து கொள்ள வேண்டும். அதாவது,  இவர் கடந்த காலங்களில் இனவாதம் பேசியது எவ்வளவு தூரம் உண்மையோ அதே போல கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அவ்வாறு பேசவில்லை அல்லது மிக கணிசமாக அதனை கைவிட்டு விட்டார் என்பதும் உண்மையே. அதாவது,  SJB அணியுடன் இணைந்ததன் பிறகு இனவாதம் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றே அதனைப் பார்க்கலாம்.


இன்னும் ஒரு யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.


இனவாதம் பேசுகின்ற அத்தனை பேருமே தமது சுயநலத்துக்காகவே அதைச் செய்கிறார்கள். அரசியல் தேவைகளுக்காகவே அதனை செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமது சொந்த இனங்களுக்கே விசுவாசமாக இருப்பதில்லை.


இனவாதத்துக்கு இடம் கொடுக்காத ஓர் அணியில் இணைகிற போது அவர்கள் இனவாதம் பேசுவதை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் இவர்களைப் போன்றவர்களையும் எஸ்.ஜே.பி அணி இணைத்துக் கொண்டு விட்டதே என எதிர்மறையாகவும் இதனை பார்க்கலாம். 


அல்லது....


 இன்னொரு வகையில்,  இவர்களை போன்றவர்கள் வெழியே இருந்து கொண்டு இனவாதம் பேசுவதை விடவும் இனவாதத்திற்கு இடம் கொடுக்காத எஸ்.ஜே.பி அணியில் இணைந்து இனவாத கருத்துக்களை கைவிடுவதானது நமது சமூகத்துக்கு நாட்டுக்கும் ஒரு பாதுகாப்பான சாதகமான சூழ்நிலையே என்று அதனை நேர்மறையாகவும் பார்க்கலாம்.


நடுநிலையாக நின்று சிந்தித்தால் இன்னும் ஒரு விடயத்தையும் மறந்து விடக்கூடாது. 


அதாவது கடந்த கோட்டா- ராஜபக்ஷ ஆட்சியில் இனவாதத்திற்கு முன் நின்று நடத்திய பல குழுக்களும் நபர்களும் அமைப்புகளும் தற்போது என்.பி.பி அணிக்கு ஆதரவளிக்க தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் அந்த அணியில் இருப்பதினால் என்.பி.பி அணி இனவாத அணி என முடிவு செய்துவிட முடியுமா? இல்லையே?


அரசியல் என்பது சாத்தியமானதை சாதிக்கும் கலை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 


 அவ்வாறு சாதிக்கின்ற போது அதன் விளைவு சாதகமாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.