Header Ads



முஸ்லிம்கள் மீதான பழிவாங்கல்களை JVP ஆதரித்தது, ஜனாஸா எரிப்பில் ஒதுங்கி நின்றனர்


இதுவரையில் இந்த நாட்டின் தலைமைப்பகுதியில் அமர்த்தாத ஒருவரை -சஜித் பிரேமதாசவை இம்முறை அந்த ஜனாதிபதி பதவியில் அமர்த்துவற்கான முயற்சியில்  மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 


காத்தான்குடி நகரம்,காங்கேயணோடை, - மட்/பாலமுனை, ஆகியவற்றில்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சனிக்கிழமை(7) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர்  உரையாற்றினார். 


 முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்,


தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எடுத்தமுடிவு சகல தமிழ் மக்களும் ஒன்றித்து  பயணிக்ககூடியது. இந்த மண்ணிலுள்ள எங்களுக்கு நிரந்தரமாக முன்னோக்கி நகரவேண்டுமென்றால் அதை சாத்தியப்படுத்தகூடிய  நீண்ட பயணமொன்றுள்ளது.  


அதை சாதிப்பதென்றால் நாம் ஒரே அணியிலிருந்துதான் சாதிக்கலாம். அதற்கான முயற்சியைத்தான் நாம் செய்யவேண்டும் இந்த தேர்தலில் ஒன்றாக பயணிக்க தவறிவிடக்கூடாது. நம்மிடையே உள்ள முரண்பாடுகளை களைந்துவிட்டு, பொதுவாக தூரநோக்குடன் சிந்தித்து,அனைவரும் ஒருமித்துப் பயணிக்கவேண்டும். சஜித்தின் வெற்றியில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.


 வடகிழக்கின் ஆட்சி எவ்வாறு அமையவேண்டும்  .அந்த ஆட்சிக்கட்டமைப்பு இப்படியான அரசியல் சித்தாத்தங்களின் கீழ்தான் வரவேண்டும் என்று காலம் காலமாகப் பேசி வருகின்றோம். குறைந்த பட்சம் 13 ஆவது சட்டதிருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துகின்ற விவகாரத்தில் நாங்கள் எல்லோரும்  ஒரே கருத்துடன் செயல்படவேண்டும். அதை நடத்திவைப்பதற்கு பிரயோகரீதியாக பல மாற்று வழிகள் இருக்கின்றன. அவற்றை  மிக நுணுக்கமாகச் சிந்திப்போம். அதுபற்றி  நான்  இதுதான், அதுதான் என்று  குறிப்பிட்டுப் பேச வரவில்லை.


என்னைப் பொறுத்தமட்டில் ,இந்த விவகாரம்,

நீண்டகாலமாக எங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, குரங்கு அப்பம் பிரித்த கதைபோல் போய்க் கொண்டிருக்கின்றது.சில சக்திகள்  இந்த மண்ணில் ஒழுங்கான சுய நிர்ணய உரிமையை இயலாமல் செய்ய முயற்சித்து வருகின்றனர். 


இதுவரையில் இந்த நாட்டின் தலைமைப்பகுதியில் அமர்த்தாத ஒருவரை -சஜித் பிரேமதாசவை இம்முறை அந்த ஜனாதிபதி பதவியில் அமர்த்துவற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் 


கடந்த ஜனாதிபதி தேர்தலில்,அவர் 55லட்சம் வாக்குகளைப் பெற்றபோது ,இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் மத்தியில் மோசமான இனவாதம் விதைக்கப்பட்டிருந்தது.


பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் முழுமையாக ஒரு வெறுப்புணர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில்தான் 55 இலட்சம் வாக்குகளை அவரால் பெற முடிந்ததது. ஆனால்,இன்று அவ்வாறு   இனவாதம் இல்லாத சூழல் நிலவுகின்றது.எனவே சிங்கள பெரும்பான்மை மக்களிடையே மீண்டும் இனவாதத்தைக் கிளப்பி,அதைச் சொல்லி வாக்கெடுப்பதற்கு எவராலும் முடியாது. 


வாக்காளர்கள் மத்தியில் அதிகமானோரை நாங்கள் வசீகரித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் தாராளமாக உள்ளன.எல்லா இடங்களிலும் சிலர் உள்ளனர் .அவர்கள் சில சலசலப்புகளைச் செய்வார்கள்.ஆனால்,அவர்களால் கரை புரண்டோடும் இந்த காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. இது நாம் வெளிப்டையாகக் காணும் விடயம் சஜித்தின் வெற்றியில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.தேர்தலுக்கு இன்னும் இரண்டு கிழமைகளே எஞ்சியுள்ளன. 


மும்முரமாக  அனைவரும் ஒருமித்து செயற்பட்டு தமிழ் ,முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமல்ல, சிங்கள பிரதேசங்களிலும் கூட  எங்களுடைய பிரசாரங்களைச் செய்து கொண்டு போகின்றோம். உன்னதமான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவ்வாறு செய்கின்றோம்.


முன் போல,இனவாதத்தை நாட்டில் தற்போது சந்தைப்படுத்த முடியாது. இன்று பெரும்பான்மை மக்களிடத்தில் இனவாதமென்பது  அநேகமாக இல்லாமல் போய்விட்டதென்றே சொல்லலாம். 


இனவாத பிரசாரங்களுக்கு சாணக்கியமான சிங்கள,தமிழ் ,முஸ்லிம் மக்கள் இனிமேல் அள்ளுண்டு செல்லமாட்டார்கள்.


ஏற்கெனவே நிறைய புலனாய்வு அறிக்கைகள் வெளிவந்து விட்டன. நிறைய போலியான விடயங்கள் எங்களுக்கு மத்தியில் உலா வருகின்றன.


தற்போது சமூகவலைத்தலங்களில் பெரிய கருத்துக் கணிப்பீடுகள் காட்டப்படுகின்றன.அண்மையில் வவுனியாவுக்குச் சென்றோம். அங்கும் அனேகர் சஜித் பிரேமதாச,தன்னுடைய தகப்பனாருடைய வாரிசு மாத்திரமல்ல ,இவரும் இரவு பகலாக உழைக்கும் ஒரு எதிர்கட்சித்தலைவர் என விருப்பத்துடன் பார்க்கின்றார்கள். பெரும்பான்மை மக்களின்  அமோக ஆதரவும் அவருக்கே இருக்கின்றது. 


அண்மைக்காலமாக தற்போதைய ஜனாதிபதி தடியைக் கொடுத்து அடியை வாங்குகின்றார். அவர் சஜித்துக்கு அனுரகுமாரவை வீழ்த்த முடியாதென்ற ஒரு மாயையான பிரசாரத்தைக் கொண்டு செல்லுகின்றார். இது எவ்வளவு வங்குரோத்து தரமான அரசியல் இது முழுக்க முழுக்க அவருடைய ஆற்றாமையையும் சஜித் மீதுள்ள பொறாமையையுமே வெளிப்படுத்துகின்றது.


ஜனாதிபதி தேர்தலில்  மூன்றாம் இடத்தைக் கைப்பற்ற நாமல் ராஜபக்ஷவுக்கும்,ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில்  கடும் போட்டி நிலவுகிறது.


90 பேர் வரையிலான "மொட்டு" க்கட்சிக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அநாதை விடுதியில் போய்ச் சேர்ந்துள்ளனர். அந்த "சிறிகொத்த அநாதை இல்லம்'இப்பொழுதெல்லாம் ஆட்டம் காணும் நிலைமைக்கு வந்துள்ளது .ஜனாதிபதி இவ்வாறு பேசும் போது எங்களது கதி என்ன ? என்று அவர்களில் சிலர் நாங்களும் தொலைந்து விடுவோமோ என பின் கதவால்  பேசும்  நிலையிலுள்ளனர். அதுமட்டுமல்ல ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள்,ரணிலின் மடைத்தனமான கதையால் நாட்டுக்கு அழிவு வந்துவிடும் என்று நினைத்து, மீண்டும்  சஜிதை ஜனாதிபதியாக்கவேண்டுமென்று மறுபக்கம் திரும்பும் ஒரு நிலைமையும் ஏற்பட்டுள்ளது.


ஆனால், முகநூல்கள் உட்பட சமூகவலைத்தலங்களில் ஒரு வெறும் பிம்பத்தைக் காட்டுகின்றனர். அதை ஹிஸ்புல்லாஹ் இங்கு அழகாக கணக்கிட்டுக் காட்டினார்


சஜித்தை தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் மிகத் தீர்க்கமாக எல்லோரையும் முந்திக்கொண்டு தீர்மானத்தை எடுத்தது. இன்று முன்னணியில் நின்று அவர் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பாடுபடுகின்றது.


இந்த நாட்டுக்கு இப்படியான ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில்  நாட்டைக் கையளிப்பதற்கு உகந்த அனுபவம் வாய்ந்தவர்கள்  எமது ஐக்கியமக்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர்.


ஜேவிபியினர் மோசடியைப் பற்றிக் கதைக்கிறார்கள். அவ்வளவுதான்.


ஜனாஸாக்கள்  எரிக்கப்படும் போது ஜேவிபியினர் பேசியதைப் பார்த்தீர்கள் தானே?  விஞ்ஞானரீதியான விடயத்தில் தாங்கள் தலையிடக்கூடாதெனக் கூறி  அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தின் மீது அப்பட்டமாக சுமத்தப்பட்ட பழிவாங்கல்களை அங்கீகரித்து , ஆதரித்தவர்தான் இப்போது வந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாகச் சொல்கின்றார்கள்.


 இது மிகமோசமான பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்குரிய சந்தர்ப்பமாகும்.இதில் சிறுபான்மை சமூகங்கள் சரியான முடிவுகளைச் செய்யவேண்டும்.  அந்த தேர்வு பெரும்பான்மை சிங்களவர்கள் மட்டுமல்லர், தமிழ் , முஸ்லிம்களைப் பொறுத்தமட்டிலு ம் கூட சஜித் பிரேமதாசவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்ற உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் .


கடந்த காலங்களில் காத்தான்குடியை வியாபார பொருளாக வைத்து அரசியல் அட்டகாசம் செய்து, முழு சமூகத்தின் மீதும் பழி சுமத்தி  முழுநாடுமே ஆபத்துக்குள் வந்து விட்டதென்று கூறினார்கள்.     

 

சந்திரிகா பண்டார குமாரதுங்கவுக்கு ஆதரவாக ஒரு ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்ட பின்னர்  தற்போது  நானும்,இந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினரொருவரும் ,மட்டக்களப்பு மாவட்டத்தின் மகத்தான தலைமையுமான கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வும் ஒரே மேடையில் இருக்கின்றோம்.


  அரசியல் நோக்கத்தை அடைந்து கொள் வதற்காக ,மூளைச் சலவை செய்யப்பட்ட சிலரைப் பாவித்து செய்த காரியத்திற்காக காத்தான்குடியின் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் அபாண்டத்தைச் சுமத்தி, முழுநாட்டு முஸ்லிம்களையுமே ஆபத்துக்குள் கொண்டு வந்து வந்தவர்   சில வருடங்களில் நாட்டை விட்டு ஓடினார். அவரது  எச்சங்கள் இந்த தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டைக்காக சில வேலைகளை செய்யப்போகின்றார்கள். 



தற்போதைய ஜனாதிபதி ரணில்,இங்கு தாருல் அதர் பள்ளிவாசலை நேரில் கையளிக்க நாளை(8) வரவுள்ளாராம்.


 இந்த பள்ளிவாசல் தொடர்பாக பயங்கரவாதத்தோடு வேண்டுமென்று முடிச்சுப் போடப்பட்டு அதை அரச உடமையாக்கிவிட்டது போன்றதான மிகப்பெரிய பழியொன்றைச் சுமத்தி  அதனை சர்வதேச ரீதியாக பகிரங்கப்படுத்தினார்கள்.      


 இந்த பள்ளிவாசலை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் தெரிவு செய்யப்பட்டு,ஓரிரு மாதங்களுக்குள் நான் அவரிடம் பல தடவைகள் சென்றேன். என்னை சாகல ரத்நாயக்கவிடம் போகச் சொன்னார். சாகல ரத்நாயக்கவைச் சந்தித்து நான் பைலைக் கொடுத்தேன். 


ஊருக்கு நடுவேயுள்ள இந்தப் பள்ளிவாசலில் இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்டு வந்து நிறுத்தி, இதனை அரச உடமையாக்கிவிட்டதாக இந்தப்பயங்கரவாதத்துக்கு அந்த பள்ளிவாசலையும் காரணம் காட்டி, அங்கு சஹ்ரான் வந்து போனதாக கூறி புரளியைக் கிளப்பினார்கள்.


 குண்டுத்தாக்குதல் பின்னணியில் மிக்பெரிய சதி அரங்கேற்றப்பட்டது.


 பாராளுமன்றத்துக்குள்ளும் ,வெளியிலும் நாங்கள் மட்டுமல்ல இன்றைய ஜனாதிபதி வேட்பாளர்களில் முக்கியமான சஜித் பிரேமதாசவும் இது வேண்டுமென்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஒரு சிறு கும்பலின் மூலையைச் சலவை செய்து,கன கச்சிசதமாகச் செய்த காரியம் என்றோம்.பேராயர் ஆண்டகையும் இதுபற்றி  இன்றும் பேசிக்கொண்டே வருகின்றார்.  இரண்டு பேரைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க வேண்டாமெனவும் அவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு வேண்டாமென்ற ஒருவர்தான் நாளைக்கு(8) தாருல் அதர் பள்ளிவாசலை விடுவிக்க வருகிறார்.   அவ்வாறு நடைபெறவுள்ளது ஒரு பூச்சாண்டி வேலை.அதை வைத்து ரணில்இந்த மண்ணில் வாக்கு கேட்பது மடைத்தனமான  வேலை.

 

என்னை அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை சந்திக்கச் சொன்னார். அடுத்த கிழமை தான் தேசிய பாதுகாப்பு சபையில் போட்டு, அதில் ஒரு அனுமதியை எடுத்து அதை நீக்கி  தருவதாக கூறினார்.


ஆனால் நான் கேட்டது இதை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவிடம் அல்லது பள்ளிவாசல்கள் சம்மேளத்திடம் ஒப்படையுங்கள். அவர்கள் பொறுப்பெடுத்து அந்த நிர்வாகத்தை அவர்கள் செய்வார்கள் என்றுதான் சொன்னேன்.


இந்த கால கட்டத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகளிடம் நான் அடிக்கடி தாருள் அதர் பள்ளிவாசலின் நிலை என்ன என்று கேட்டு வந்தேன்.ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் விடுவிப்போம் என்றுதான் சொல்லி வந்தார்கள். ஆனால் தேர்தல் காலம் என்பதை முன்னிட்டு தற்பொழுது விடுவித்து ள்ளார்கள். ஆனால், இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வரவில்லை. இது மட்டுமல்ல, இதைவிட மிகப் பெரிய அநியாயங்களையும் செய்துள்ளார்கள்.


ஜனாதிபதி மட்டத்திலான விசாரணை நடத்தி,  இந்த மண்ணில் மீது சொல்லப்பட்ட அவதூறுகளையும்,களங்கங்களையும் இல்லாமல் செய்கிற நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.


முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் தாய்க் கட்சி. இதைபலவீனப்பபடுத்தப்படக் கூடாதென்பதற்காக ஹிஸ்புல்லாஹ் மாத்திரம்தான் கட்சியை விட்டு வெளியே போயிருந்த போதும் தனிக் கட்சி தொடங்காதவர். 


இந்த மாவட்டத்தின்  ஆளுமை ஹிஸ்புல்லாஹ்வும், நாமும் ஏதோ காரணத்தால் பிரிந்து இருந்தோம் ஆனால் இன்று அவரின் வருகையினால்,  முஸ்லிம் காங்கிரஸ்   பெருமிதமடைகிறது. இது அனேகருக்கு ஆறுதலைத்தந்துள்ளது.


இந்தத் தேர்தலில் எங்களுக்கும் சிகப்பு சகோதர்களுக்கும்  போட்டி இருப்பதுபோல் தோற்றப்பாட்டை காட்டுகிறார்கள்.ஆனால்,எங்கு பார்த்தாலும் சஜித்தின் கோஷம்தான் கேட்கின்றது. அம்பாறை தெஹியத்தண்டிய, பதியத்தலாவ, மஹஒயா ஆகிய பிரதேசங்களில்  சிங்கள மக்களும் முஸ்லிம் காங்கிரஸுடன் நல்லெண்ணத்துடன் வேலை செய்கின்றார்கள் எங்களிடம் பாகுபாடு இல்லை. 


கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை மிக நீண்டகாலம்  இராணுவ உயர்அதிகார்கள் மட்டும்தான் செய்து வந்தார்கள். யாரும் எதுவுமே பேசிவில்லை. பேச முடியாமல் சும்மா இருந்தார்கள். 


   

  ஆனால் தற்போது வேறுவிதமாக பேசுகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ்,எமது சமூகத்தைச்சேர்ந்தவர்கள்தான் வரவேண்டும் என்று  பேசவில்லை. இன்று இருக்கின்றஆளுநரின் கட்சியின்  செயலாளரானஅமைச்சர் , ஓரிடத்தில் சொல்லியுள்ளார் நான் ஏதோ உடன்பாடு செய்துள்ளதாக. ஆளுநர் பதவி எங்களுடைய சமூகத்துக்கு தரவேண்டும் என்று  கேட்டதாக சொல்கிறார்கள். இதில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை. ஆனால், கேட்கக் கூடாது என்றும் இல்லை. அது ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விடயம்.அவருடைய தற்றுணிபைப் பொறுத்தது.


. இன்றைய ஆளுநர், ஆளுநர் பதவியை எடுப்பதற்கு முன் எனக்கு தொலைபேசி  எடுத்தார். "அண்ணா உங்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும்" எனக்கூறினார். நான்  உங்களுக்கு எனது மனப்பூர்வமான ஆசீர்வாதம் உண்டு என்றேன். பின்னர்  "அண்ணா நான் உங்களை வந்து சந்திக்க வேண்டும் "என்று சொன்னார். "நான் நேரில் வந்து உங்கள் முன் ஆசீர்வாதம்பெற்றுக் கொள்ளவேண்டும்" என்று என்னிடம் கேட்டார்.வாருங்கள் என்று அழைத்தேன். வந்து பேசி ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.


 "கிழக்கு மாகாண ஆளுநmiராக நான் இருந்தாலும் கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை உங்களிடம் ஆலோசனை பெறாமல் நான் செய்யமாட்டேன்"எனச் சொன்னார்.


மட்டக்களப்பில் தமிழர்கள் பெரும்பான்மையினர். ஆனால் நாம் நமது பிரச்சினைகளைப் பேசி தீர்ப்பதுதான் சிறந்தது. எமக்கும் பிரச்சினை இல்லாமல் இல்லை. 

 தமிழ் சமூகத்தினரும் முஸ்லிம் சமூகத்தினரும் எங்களுக்கிடையிலுள்ள பிரச்சினைகளை  சுமுகமாக பேசித் தீர்மானிப்பதே சிறந்தததாகும்


No comments

Powered by Blogger.