Header Ads



JVP யின் செயலாளராக, ரணில் மாறியிருக்கின்றார் - சஜித்




ஜனாதிபதித் தேர்தல் பிரதான பிரிவு கோடாக மாறி இருக்கின்றது. ஒரு பக்கம் நாட்டை தீயிட்டு கொளுத்தி நாட்டை சீரழித்து தொழிற்சாலைகளை தீட்டு கொளுத்திய, பாடசாலைகளுக்கு தீ வைத்த, டிபோக்களுக்கும், பஸ் வண்டிகளுக்கும் தீ வைத்து, முழு நாட்டிலும் மிலேட்சத்தனமான கொலைகளை மேற்கொண்ட ஒரு குழு இருக்கின்றது. மறுபுறத்தில் அந்தக் குழுவின் பொதுச்செயலாளராக ரணில் விக்ரமசிங்க மாறியிருக்கிறார். தற்பொழுது இந்த அரசியல் தளத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் முன்னிலையில் இருக்கின்ற சுத்தமான அரசியல் சக்தி ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமே காணப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகிய இந்த இரண்டு அரசியல் கூட்டிற்கும் தேவை சஜித் பிரேமதாச ஆகிய என்னை இந்த தேர்தலில் தோல்வியடையச் செய்வது ஆகும். அதற்கான காரணம் நான் இந்த நாட்டுக்கு சேவை செய்வேன் என்கின்ற அச்சம். நாட்டின் பிரச்சினைகளிலும் சிக்கல்களிலுமே இவர்கள் தங்கி இருக்கின்றார்கள். இவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்பக்கூடிய வேலைத்திட்டங்களோ அல்லது குழுவோ அல்லது இலக்கோ, அத்தோடு அதற்கான கால எல்லையே இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 37 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(07) மாலை கொலன்னாவையில் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 


🟩 டீல் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.


ரணில்- அனுராவின் இரகசிய ஒப்பந்தம் தற்பொழுது புதிய திரைப்படமாக மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவி ஒன்றை வழங்குவதற்கான டீல் ஒன்று உள்ளதா என்பது குறித்து அறிய வேண்டும். 


நல்லாட்சிக் காலத்திலும் அநுரவை கவனிப்பதற்கு ரணில் சிந்தித்து இருந்தாரா என்பது குறித்தும் ஆராய வேண்டும். இந்த டீல் அரசியல் கலாச்சாரத்தை நிறுத்தி சுத்தமான அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவேன். தம்மிடம் திருட்டுத்தனமான ஒப்பந்தங்கள் இல்லை. உறுப்பினர்களை வைத்துக் கொள்வதற்காக பணம் செலவிடுவதில்லை. தம்மோடு இருக்கின்ற அனைவரும் இன்று கொள்கைக்காகவே தம்மோடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


🟩 அநுரவுக்கும் ரணிலுக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.


அநுரவுக்கோ ரணிலுக்கோ நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல முடியாது. மாற்றவும் முடியாது என்று கூறியவர்கள் தற்பொழுது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசிப்பதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுகின்ற திருட்டுத்தனமான தந்திரமான அரசியலுக்கு அடிபணிய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்துடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடி இருக்கின்றேன். 21 ஆம் திகதி அதிகாரத்திற்கு வந்த பின்னர் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குகின்ற ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல உள்ளேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


🟩 உயர்தரத்தில் உள்ள செல்வந்தர்களையே இந்த அரசாங்கம் பாதுகாக்கின்றது.


இந்த அரசாங்கத்தின் இயலாமையினால் பொதுமக்கள் மீதான உணர்வே இல்லாமல் செயற்படுகின்றது. கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அசெளகரியப்படுத்துகின்ற ஒப்பந்தங்களுக்கு சென்றுள்ளது. செல்வந்தர்களை பாதுகாத்து ஊழியர் சேமலாப கணக்குகளையும் கொள்ளையடிக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தனியார் துறையினரின் சம்பளத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.


🟩 கீழ்மட்ட மனிதர்களின் யுகத்தை உருவாக்குவோம்.


நடைபாதை வர்த்தகர்கள் முதல் சுயதொழில் செய்கின்ற பெண்கள் கூலி வேலை செய்கின்றவர்கள். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள், துப்புரவாளர்கள் என அப்பாவி மக்கள் எமது நாட்டில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கான பாதுகாப்பு இல்லை. இந்த கீழ்மட்ட மனிதர்களை பாதுகாப்பதற்காக கீழ்மட்ட மனிதர்களின் யுகத்தை 21 ஆம் திகதி உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.